♥♥♥ இலங்கையின் இனியவன் ♥♥♥

திங்கள், 25 ஜனவரி, 2010

எட்டாவது உலக அதிசயம் !


நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
நேற்றைய  தினம் ஒரு பழைய பாடசாலை பாடநூலை புரட்டிய போது அதில் ஒரு
பக்கத்தில் இலங்கையின் சிகிரியாக் குகை பற்றி வாசித்தேன் .
அதன் பின்பு அது பற்றி ஒரு பதிவு இடலாம் என எண்ணினேன்.



சிறப்புக்கள்,அழகுகள் பொருந்திய பல விடயங்கள் எமது தாய்திருநாடன இலங்கையில்
காணப்படுகின்றன.அவற்றுள் இலங்கையின் இணையற்ற கலைச்சின்னமாக சிகிரியாக்குன்று அன்று முதல் இன்று வரை கருதப்படுகின்றது. இது மாத்தளை மாவட்டத்திற்கும் அனுராதபுரம் மாவட்டத்திற்கும் இடையிலுள்ள தம்புள்ள நகரத்திற்கு
அண்மையில் அமைந்துள்ளது.இந்தக்குகை ஓவியங்கள் ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்தவையாகும்.1144 அடி உயரமான இக்குன்றினுள் அழகிய வேலைப்பாடுடன் கூடிய சித்திரங்கள் பல உள்ளமை சிறப்பம்சமாகும்.

எதிரிகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவே இக்கோட்டையை முதலாம் காசியப்ப மன்னன் கீ.பி 477-495 இல் அமைத்தான்.இக்கோட்டயைச்சுற்றி அகழியும் வெட்டப்பட்டுள்ளது.நாம் ஒவ்வருவரும் பெருமைப்பட வேண்டிய விடயம் யாதெனில் இந்தச் சிகிரியாக்குன்றானது ஐக்கிய நாடுகள் கல்வி,அறிவியல்,பண்பாட்டு நிறுவனத்தால் (UNESCO) பாதுகாக்க வேண்டிய இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இக்குகையினுள் பிராஸ்கோ (FRASCO) முறையில் இயற்கை வர்ணங்கள் கொண்டு வரையப்பட்ட பல சித்திரங்கள் காணப்படுகின்றன.பல ஓவியங்கள் இன்றும் கூட அழிவடையாமல் அதே மெருகுடன் காட்சியளிக்கின்றன.இதில் பல வகையான இயற்க்கை வர்ணங்களே பயன்படுத்தப்பட்டுள்ளது. இங்கு காணப்படும் பெண்கள் ஓவியங்கள் சிலரால் தேவதைகள் (அப்சரஸ்கள்) எனவும் சிலரால் காசியப்பனின் மனைவிகள் எனவும் கூறப்படுகின்றனர்.இவர்களில் சிலர் கையில் தட்டை ஏந்தியவாரும் ,சிலர் மேலாடை இன்றியும் ,சிலர் மலர்களை ஏந்தியாவரும், தனித்தும் கூட்டமாகவும் இருக்குமாறு வரையப்பட்டுள்ளனர்.கிட்டத்தட்ட அஜந்தா குகை ஓவியங்ககளை ஒத்ததாக இவை காணப்படுகின்றன.இந்தியாவிற்கு எவ்வாறு அஜந்தா ஓவியங்களோ அது போல் தான் இலங்கைக்கு சிகிரியா ஓவியங்களும்...


இந்த சிகிரியா ஓவியங்கள் உல்லாசப்பயணிகளைக் கவரும் இடங்களில் ஒன்றாகத் திகழ்வதுடன், அந்நிய செலாவணியை பெற்றுத்தரும் இடமாகவும் இருக்கின்றது.எவ்வளவோ இருந்தாலும் கூட சிகிரியவுக்கு தனி மவுசு உள்ளது. அந்நிய செலாவணியும் வந்து குமிகின்றது. எனவே இதனைப் பொக்கிசமாகப் பாதுகாக்க வேண்டியது நம் அனைவரினதும் கடைமையாகும்.

உலகளவில் ஏழு அதிசயங்கள் காணப்படினும் தரப்படுத்தல் வரிசையில் சீனப்பெருச்சுவர் ,தாஜ்மஹாலுக்கு அடுத்த நிலையில் எட்டாவது உலக அதிசயமாக இந்த சிகிரியா ஓவியங்கள் காணப்படுகின்றது.

கருத்துகள் இல்லை: