இளமை உன் தோள்களில்
இருக்கும் பொழுதே
எது நிசம் என்பதை
எட்டி விடு !
எழுதிய படிதான்
நடக்கும் எல்லாம்
விதிவசம் என்பதை
விட்டு விடு !
-கவிப்பேரரசு வைரமுத்து -
இருக்கும் பொழுதே
எது நிசம் என்பதை
எட்டி விடு !
எழுதிய படிதான்
நடக்கும் எல்லாம்
விதிவசம் என்பதை
விட்டு விடு !
-கவிப்பேரரசு வைரமுத்து -
வருவது வரட்டும் !
வாழ்க்கையை நடத்து -உன்
கனவுகள் பலிக்கும்
கடமையைத் திருத்து !
இளைகனே உனக்கு -வீண்
கவலைகள் எதற்கு ?
அளந்தது கிடைக்கும்
அழுவதை நிறுத்து !
-கிண்ணியா அமீர் அலி-
கிண்ணியா அமீர் அலி இவர் எங்கள் பாடசாலையில்தான் பணிபுரிகின்றார். ஆசான் என்பதை விட ஒரு நல்ல நண்பன் எனலாம் இவரை, காரணம்
எங்களுக்கு இவர் ஒரு சிறந்த முன்னோடி.இவர் இ.ஒ.கூ,நேத்ரா தொலைக்காட்சியின்
நிகழ்ச்சிகளில் பங்குபற்றுபவர்.(தொடர்பு கொள்ள : கலைமகள் தமிழ் வித்யாலயம் இல-300 /4 ,சிறிமாவோ பண்டாரனயாக மாவத்தை ,கொழும்பு - 14.
நாமெல்லாம் பறவைகள்
நமக்கேது கவலைகள்
நமக்கோர் இலட்சியம்
நிறைவேறும் நிச்சயம்..........







