♥♥♥ இலங்கையின் இனியவன் ♥♥♥

சனி, 25 டிசம்பர், 2010

1022 சொற்களை அறிந்து வைத்திருக்கின்றது நாய்

                                
1022 சொற்களை அறிந்து வைத்திருக்கின்றது Chaser என்கிற பெண் நாய். இது Border Collie என்கிற உயர் ஜாதி இனத்தைச் சேர்ந்தது. இந்த இன நாய்கள் மிகவும் புத்திக் கூர்மை உடையவை. உலகில் அதிக சொற்களை தெரிந்து வைத்திருக்கும் பிராணி Chaserதான். 

இச்சொற்களுக்கு உரிய பொருட்களை அடையாளம் காணவும், பொருட்களை பயன்பாட்டுக்கு அமைய வகைப்படுத்தவும் இந்நாய்க்கு முடியும். அதாவது மூன்று வயது குழந்தைக்கு உரிய அறிவுடன் இது செயல்படுகின்றது என்கின்றனர் விஞ்ஞானிகள். 

ஜேர்மனிய நாட்டு பயிற்றுவிப்பாளர் ஒருவர் இந்நாய்க்கு 200 சொற்களை முதலில் சொல்லிக் கொடுத்தார். இந்ந்லையில் Border Collie உயர் ஜாதி ரக நாய்கள் சொற்களை தெரிந்து கொள்வதில் ஏதேனும் மட்டுப்பாடுகள் உண்டா? என்கிற ஆய்வில் அமெரிக்காவின் Wofford கல்லூரி நிபுணர்கள் இருவர் இறங்கினர். 

மூன்று வருடங்கள் Chaser இற்கு பயிற்சிகள் கொடுத்தனர். 838 சோதனைகளில் இந்நாய் இது வரை தேறி உள்ளது

புதன், 22 டிசம்பர், 2010

Click to play this Smilebox slideshow
Create your own slideshow - Powered by Smilebox
Make your own free picture slideshow

செவ்வாய், 21 டிசம்பர், 2010

நண்பேன்டா...

                                                                  
ஜப்பானில் உள்ள மிருகக் காட்சிச்சாலை ஒன்றில் காட்டுப் பன்றிக் குட்டி ஒன்றும், குரங்குக் குட்டி ஒன்றும் இணை பிரியா நண்பர்களாக இருந்து வருகின்றன. இவற்றை பிரிக்க முடியாமல் உள்ளது. பன்றிக் குட்டியின் மேல் குரங்குக் குட்டி உல்லாசமாக சவாரி செய்கின்றமையை வழமையாக கொண்டு இருக்கின்றது.

பெற்றோரால் கை விடப்பட்ட குரங்குக் குட்டி உற்ற நண்பனாக சிறுவயது முதலே இப்பன்றிக் குட்டியுடன் எப்படியோ ஒட்டிக் கொண்டது.


வெள்ளி, 17 டிசம்பர், 2010

ஏன்? எதற்கு? எப்படி?

பல் போனால் சொல் போச்சுனு சொல்லுவாங்க, ஆமாம் "சொல்லுனா" என்னாங்க? வரையறுக்கப்பட்ட ஒலி என்று சொல்லலாமா!.... தமிழ் இலக்கணத்தில் சொல் என்பதை "ஒரு பொருளை கூறும் மொழிக்கூறு" என்று சொல்லுவதுண்டு. அதேபோல் சொல் என்பது ஒரு ஒலி வடிவம். இந்த ஒலி வடிவம் வாய்வழியில் உருவாகி காதுகளால் உணரப்படுகின்றது. அப்படியானால் மொழி என்பது என்ன? ஒலியையும் சைகைகளையும் மூலகூறுகளாக கொண்ட இலக்கணங்கள் அடங்கிய சொற்களை மொழி என்று கூறலாம்.

ஒலி என்பதை விஞ்ஞானம் எப்படி அழைக்கின்றது? ஒலி என்பது காதுகளால் கேட்டு உணரகூடிய அதிர்வுகளை குறிக்கும். அதாவது ஒலி என்பதை அழுத்தம் மாற்றம், துகள் நகர்வு அல்லது துகள்களின் திசை வேகம் என்று கூறலாம்.

ஒலி எவ்வாறு கடத்தப்படுகின்றது அல்லது பரவுகின்றது? ஒலி அலைகளாக கடக்கின்றது. அதாவது எல்லாத்திசைகளிலும் சரியான விகிதத்தில் அலைகளாக பரவுகின்றது. அந்த அலையில் வேகம் மற்றும் அதிர்வெண்ணை பொருத்து தூரம் கடக்கின்றது. ஒலி பரவ ஊடகம் தேவை, காற்று மற்றும் வாயுக்களில் நெட்டலைகளாக ஒலி பரவுகின்றது. சில உலோகம் மற்றும் திடப்பொருள்களிலும் பரவும் ஆனால் பொருளின் தன்மைகேற்ப அதன் வேகம் குறையும் (உதாரணமாக கண்ணாடியில் ஒலியின் வேகம் குறைவு). வெற்றிடத்தில் ஒலி அலைகள் பரவாது. ஆனால் மின்காந்த அலைகள் வெற்றிடத்தில் வேகமாக பரவும். ஈரக்காற்றில் ஒலியின் வேகம் அதிகமாக இருக்கும்.

ஒலி எவ்வாறு உருவாகின்றது? பொருள் அதிவுருவதால் ஒலி உண்டாகின்றது. முறுக்கப்பட்ட கம்பியில் உண்டாக்கப்படும் அதிர்வுகளால் வீணை மற்றும் வயலினில் ஒலி உருவாகின்றது. காற்று மூலகூறுகளில் அதிர்வால் புல்லாங்குழலில் ஒலி உருவாகின்றது. முறுக்கப்பட்ட கம்பி அதிர்வுகளை கைகளால் கட்டுப்படுத்தி இசையாக வெளியாகின்றது. காற்றின் அதிர்வை பூல்லாங்குழலின் துளைகளை கட்டுப்படுத்தப்பட்டு நாதம் உருவாக்கப்படுகின்றது.

                                                           நாம் எவ்வாறு ஒலி எழுப்பி பேசுகின்றோம்? மனிதன் தன் குரல்வளை மூலம் ஒலி எழுப்புக்கின்றான். நுரையீரல்களிலிருந்து வரும் காற்றின் உதவியால் குரல்வளையில் உள்ள உள்நாக்கு அதிர்வடைந்து ஒலி உருவாகின்றது. அந்த ஒலி நாக்கு, உதடு, பல், வாய், தொண்டை குழி அகியவற்றின் அதிர்வளைகளால் ஒலி மாற்றம் அடைந்து சொல்லாக மொழியாக வெளிவருகின்றது. இப்படிப்பட்ட ஒலி அதிர்வைதான் சொல் என்கின்றோம். இலக்கணவரையறுக்கப்பட்ட சொல்லை மொழி என்று சொல்லுகின்றோம். மொழியானது உயிர் மற்றும் மெய்யொலிகளால் உருவாகின்றது. இவ்வாறு ஒலி சொல்லாக மாறுவதை ஒலிமாற்றம் என்று அழைக்கப்படுகின்றது.
                                           குரல்வளையால் உருவாக்கிய ஒலி மற்றும் சொல்லை நாம் எவ்வாறு உணருகின்றோம்? அதாவது எப்படி கேட்கின்றோம்? காதுகளால் உணரப்படுகின்றது. பாலுட்டிகளுக்கு பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு காதுகள் உள்ளது. காதினுல் இருக்கும் திரவ குடத்தில் மிதக்கும் சுருள் போன்ற அமைப்புதான் குரல்வளையில் உருவாக்கப்பட்ட ஒலி அதிர்வுகளை உணர்ந்து அதன் ஒத்த அதிர்வுகளை மூளைக்கு அனுப்பி அதன் அதிர்வுகளை சொல்லாக மொழியாக நமக்கு மூளை உணர்த்துகின்றது.

இப்படிப்பட்ட ஒலி அதிர்வுகள்தான் நம்முடைய தொடர்பிற்கு மிகவும் பயனாக இருக்கின்றது. ஒலியின் அதிர்வுக்கு தகுந்த எழுத்துகளை உருவாக்கி எழுத்துகள் மூலமாகவும் செய்திகளை தொடர்புக்கொள்கின்றோம். மொழி என்பது தொடர்பிற்கு மட்டும் இல்லாது கலாச்சார நிகழ்வுகளை பதிவு செய்யும் ஊடகமாகவும் இருக்கு என்பதும் உண்மை.

மொழி என்பது நமது கலாச்சாரம்
மொழி என்பது நமது வாழ்வாதாரம்
மொழி என்பது நமது உணர்வு
மொழியிழந்தவன் தன்னையே இழந்தவனாவான்........

ஏன்? எதற்கு? எப்படி?

மூளை ஒரு இயற்பியல் மற்றும் வேதியியல் கூட்டு செயல்பாடு. உயிரை முற்றிலும் கட்டுப்படுத்துவது இந்த மூளைதான். இது வரை நமது அறிவியல் முழுமையாக மூளையின் கட்டமைப்பை கண்டறியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மூளை செயலற்று போனால் அந்த உயிர் இறந்துவிட்டதாக சட்டமே சொல்லுகின்றது. மூளை செயலிழந்தால் சிறுக சிறிக அனைத்து உறுப்புகளும் செயலற்று போகும். இறுதியில் அந்த உயிர் இறந்துவிடும்.


                                                                                                            
                                      நாம் ஒரு பொருளை குறிப்பார்த்து கல்லால் அடிக்கின்றோம் என்றால் கண்ணால் பார்க்கப்பட்ட அந்த பொருளை கையால் எப்படி சரியாக அடிக்கப்படுகின்றது? அதே போல எல்லோராலையும் அப்படி சரியாக அடிக்க முடிவதில்லையே ஏன்? கண்ணால் பார்க்கப்படும் பொருள் விழித்திரையில் படும்பொழுது அந்த பொருளின் தூரம் மற்றும் முப்பரிமாணம் மூளையால் கணக்கிடப்படுகின்றது. எந்த அளவிற்கு உற்று பார்க்கப்படுகின்றதோ அந்த அளவிற்கு அதன் கணிப்பும் சரியாக இருக்கும். அதனால்தான் எல்லோராலையும் சரியாக செய்ய முடிவதில்லை. இதற்கு தகுந்த பயிற்சி தேவையாகின்றது. உற்று நோக்குதல் மற்றும் ஒரு நிலைப்படுத்துதல் முக்கியம். அந்த நிலையை எட்ட மூளைக்கு பயிற்சி கொடுக்க வேண்டும். சமீபத்தில் வந்த ஆங்கில திரைப்படம் (The_karate_kid_2010) கராட்டே கிட் என்ற திரைப்படத்தில் ஒரு காட்சி "ஒரு பெண் பாம்பின் கண்களை உற்று நோக்கி பயிற்சி பெறுவதாக இருக்கும்"... இப்படிப்பட்ட பயிற்சிதான் மூளைக்கு தேவை. இந்த காட்சிதான் படத்தின் இறுதி காட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும்.


ஒரு கண்ணாடி சன்னலுக்கு அருகில் மாங்காய் மரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்ளுவோம். சன்னலில் படாமல் மாங்காயை மட்டும் கல்லால் அடிக்க வேண்டும் என்றால் பல முறை கல் சன்னலை பதம் பார்த்துவிடும் ஏன்? சன்னலை அடிக்க கூடாது என்பது முக்கியமாக கருதுவதால் மூளை சன்னலைதான் அதிகமாக பதியவைக்கின்றது எனவேதான் கல் சரியாக சன்னலை பதம் பார்த்துவிடுகின்றது. மாங்காவை மட்டுமே மனதில் பதிய வைக்க முறையான பயிற்சி தேவையாகின்றது.





சிங்கப்பூர் தாவரவியல் பூங்கா







































                                                                        

வினோதமான கடல் உயிரினங்கள்- படங்கள்