♥♥♥ இலங்கையின் இனியவன் ♥♥♥

செவ்வாய், 23 நவம்பர், 2010

அதிகம் கோபப்படுவது யார்?

சமீபத்தில் கனடாவின் டொரான்டோ பல்கலைக்கழக சமூகத்துறை குழுவினர் ஒரு ஆய்வு செய்தனர். `சமூக அமைப்பில் கோபத்தின் பங்கு' என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஆய்வில் கிடைத்த முடிவுகள் சற்று வித்தியாசமானவை.
                                                                                                                                         
18 வயதுக்கு மேற்பட்ட ஆயிரத்துக்கும் அதிகமான இளைஞர்கள் ஆய்வு செய்யப்பட்டனர். இதில் இளம் பருவத்தின் மூப்பில் அதாவது சுமார் 30 வயதில் இருந்து 40 வயது உடையவர்களே அடிக்கடி உணர்ச்சி வசப்படுகிறார்கள் என்று தெரியவந்தது. அவர்களின் வாழ்க்கைச் சூழல், பண நெருக்கடி, பல்வேறு சூழல் களால் ஏற்படும் மன அழுத்தம் போன்றவற்றால் அடிக்கடி கோபம் அடைகிறார்கள். 
அதேபோல் அதிகம் படித்தவர்களைவிட, அரை குறையில் படிப்பை கைவிட்டவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுகிறார்கள். குழந்தைகளும் குடும்பச்சூழலைப் பொறுத்து கோபம் கொண்டதாகவும், அதற்கேற்ற பழக்கவழக்கம் உடையதாகவும் வளருகிறது. ஆண் களைவிட பெண்களே அதிகம் கோபப்படுகிறார்கள்.
                                                                                   
                                                                                        
                                                                   தனிப்பட்ட முறையில் பெரும்பாலானவர்கள் பண நெருக்கடியால் அதிகளவு கோப உணர்ச்சிக்கு தள்ளப்படுகிறார்கள். இன்னும் சிலர் தனிப்பட்ட முறையில் பெரும் கோபக்காரராகவும், சமூக அமைப்பில் அதற்கு நேர்மாறாகவும் இருக்கிறார்கள்.

இந்த வினோதமான ஆய்வு முடிவுகள், கோபத்தைப் பற்றிய பிரபல புத்தகமான `இன்டர்நேஷனல் ஹேண்ட்புக் ஆப் ஆங்கர்' என்ற நூலின் 4-வது பாகத்தில் வெளிவர இருக்கிறது.

திங்கள், 22 நவம்பர், 2010

செல்போனில் பேசினால் `மறதி' குணமாகும்.

                                                        
செல்போனில் பேசினால் `மறதி' குணமாகும்' என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. `அல்ஷ் கெய்மெர்ஷ்' என்ற மறதி நோயினால் உலகில் பலர் அவதிப்பட்டு வருகின்றனர். மூளையில் உள்ள செல்கள் கொஞ்சம் கொஞ்சமாக செயல் இழப்பதால் இந்த நோய் உருவாகிறது.



இந்த நோயை ஜெர்மனியை சேர்ந்த `ஆலியோஸ்' என்ற விஞ்ஞானி கடந்த 1906-ம் ஆண்டு கண்டு பிடித்தார். அன்று முதல் இந்த நோயை குணப்படுத்த விஞ்ஞானிகள் தீவிரமாக முயன்று வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது தான் இந்த நோயை குணப்படுத்த புதிய யுக்தி ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து செல்போன் பேசுவதன் மூலம் இந்த நோயை குணப்படுத்தலாம் என ஆய்வு மூலம் தெளிவு படுத்தியுள்ளனர்.
                                                        

அமெரிக்காவின் தெற்கு புளோரிடாவில் உள்ள பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த புதிய ஆய்வை மேற்கொண்டனர். இவர்கள் 96 எலிகளுக்கு நாள் ஒன்றுக்கு இருமுறை செல்போன்கள் மூலம் எலக்ட்ரோ மேக்னடிக் அலை கற்றைகளை ரிமோட் கண்ட்ரோல் மூலம் பாய்ச்சினர்.

இதன் மூலம் அல்ஷ்கெய் மெர்ஷ் நோயினால் பாதிக்கப்பட்ட எலிகளின் நினைவாற்றல் அதிகரித்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மறதி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் செல்போனில் உள்ள எலக்ட்ரோ மேக்னடிக் அலைக்கற்றைகள் மூலம் சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியும் என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளனர்.

புதன், 17 நவம்பர், 2010

நண்பர்கள் நால்வருக்கு முதல் நான்கு இடங்களும்.

                                                                         
கடந்த 13 ஆம் திகதி கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் தெரண இணையத்தளம் நடத்திய ஒலி அலையின் சிகரம் இறுதிப் போட்டியில் வெற்றியீட்டிய முதல் மூவருக்கு கையடக்கத் தொலைபேசி உட்பட பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. 


அதில் முதல் நான்கு இடங்களையும் பிடித்தவர்கள் எனது நண்பர்கள் என்பதில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி...............
அவர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் ............ 
(ப.லோகேஸ்வரன்,எம்.எப்.எம்.பஸீர்ஈ.கஜிந்தன்)
எங்க நான்காவது நபர  காணவில்லையே என பார்க்கறீங்களா ? விஜயலலிதா நண்பிங்கோ ....................!


பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற இறுதிச் சுற்றுப் போட்டிகளில் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்திய போட்டியாளர்கள், வெற்றிபெறுவதில் அதிக முனைப்புக் காட்டினர். 

போட்டி வெற்றியாளர் விபரம் 

1 ஆம் இடம் ப.லோகேஸ்வரன் 

2 ஆம் இடம் எம்.எப்.எம்.பஸீர்
 

3 ஆம் இடம் ஈ.கஜிந்தன் 

4 ஆம் இடம் வி.விஜயலலிதா 


5 ஆம் இடம் சி.விலாசினி 

6 ஆம் இடம் கா.காந்தீபன் 

7 ஆம் இடம் எஸ்.ஏ.எம்.ரஸ்மி 

8 ஆம் இடம் பிறின்சியா டிக்சி பத்மஜோதி (நண்பியே உங்களையும் மறக்கவில்லை..)

9 ஆம் இடம் த.மனோக் பிரசன்னா


10ஆம் இடம் ஆர்.காயத்திரி

செவ்வாய், 16 நவம்பர், 2010

உடல் எலும்புகள் பலமாக இருக்க...

                                                                                         
உடல் எலும்புகள் பலமாக இருக்க வேண்டும் என்றால் சுண்ணாம்புச்சத்து தேவையான அளவு இருக்க வேண்டும்.கூடவே, வைட்டமின் `டி’யும் தேவை.
இந்த சத்துகள் பால், தயிர், மீன், முட்டை, வெண்ணை ஆகியவற்றில் நிறைய காணப்படுகின்றன. இவற்றுடன் தினசரி, முளைவிட்ட கொண்டைக் கடலையும் சாப்பிட்டு வரவேண்டும். சூரியக் குளியலும் அவசியம். டாக்டர் யோசனைப்படி வைட்டமின் `டி’யை மாத்திரையாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

சுண்ணாம்புச் சத்து அதிகம் கிடைக்க வேண்டும் என்றால் முட்டைகோஸ், தவிடு நீக்காத கோதுமை மாவில் செய்யப்பட்ட சப்பாத்தி, தண்டுக்கீரை, கேரட், ஆரஞ்சுப் பழம், பாதாம் பருப்பு, வால்நட் பருப்பு ஆகியவற்றையும் தெடர்ந்து உணவில் சேர்த்து வரவும்.

இதயம் வேகமாக துடித்தல், தூக்கமின்மை, தசைவலி, எரிச்சல் போன்ற பாதிப்புகள் தெரிந்தால் அது சுண்ணாம்புச் சத்துக் குறைபாட்டின் அறிகுறியேதான்.

மேற்கூறிய உணவு வகைகளைத் தெடர்ந்து உணவில் சேர்த்து வந்தால், எலும்பு சம்பந்தமான நோய்கள் வருவதை தவிர்க்கலாம்.

நோயைக் குணமாக்கும் ரிங்டோன்கள்.....

விதவிதமான ஒலிகள் கொண்ட மொபைல் ரிங்டோன்களுக்கு இடையே புதுமையாக வந்திருக்கிறது நோயைக் குணமாக்கும் ரிங்டோன்கள். ஜப்பான் நாட்டின் 'மாட்சுமி சுசுகி' என்ற நிறுவனத்தின் ரிங்டோன் தயாரிப்பாளர்கள் நீண்ட கால ஆய்வுக்குப் பிறகு இதை வடிவமைத்துள்ளனர்.


                                              
பலவிதமான அலைவரிசையில் இதமான இசைக்கருவிகளின் ஒலிகள் மற்றும் பறவைகளின் சப்தம் போன்ற இயற்கை ஒலிகளைக் கொண்டு  இந்த ரிங்டோன்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதைக் கேட்பவர்கள் சோகமாய் இருந்தாலும் சுறுசுறுப்படைகிறார்கள். சோம்பலாய் இருந்தால் குதூகலம் அடைகிறார்கள். தாலாட்டு கேட்பதுபோல விரைவில் தூக்கம் தூண்டப்ட்டு நிம்மதியாக உறங்குகிறார்கள்.

ஜப்பானில் தற்போது அறுவடைக்காலம். இதனால் ஏற்படும் வைக்கோல் மற்றும் தூசு அழற்சியை இந்த ரிங்டோன்கள் கட்டுப்படுத்துகிறது. வேலைக் களைப்பால் பொலிவிழக்கும் தொழிலாளர்களின் முகங்களையும் இந்த ரிங்டோன்கள் கிளர்ச்சி பெறச் செய்கின்றன.எனவே இந்த ரிங்டோன்கள் ஜப்பானில் சக்கைபோடு போடுகின்றன.

                                                     
அப்போ உங்களுடைய கையடக்க தொலைபேசிகளில்  என்ன  ரிங்டோன் போட்டிருக்றீங்க ............?






நண்பர்களே... எய்ட்ஸ் நோய் வராமல் இருக்க சாப்பிடுங்கள் வாழைப்பழம்

வாழைப்பழத்தில் உள்ள ரசாயனம் மூலம் எய்ட்ஸ் நோய் வராமல் தடுக்கலாம் என அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


                                                          
                                                     


எய்ட்ஸ் நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. நோய் வரும் முன், தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. காண்டம் பயன்படுத்தினால் எய்ட்ஸ் வராமல் தடுக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.தற்போது, அமெரிக்க விஞ்ஞானிகள் இது தொடர்பாக மேற்கொண்ட ஆய்வில் புது தகவலை கண்டுபிடித்துள்ளனர்.

வாழைப்பழத்தில் உள்ள கெமிக்கல் மூலம் எய்ட்ஸ் வராமல் தடுக்கலாம் என்பது தான் அது.வாஷிங்டன் நகரில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர். பொதுவாக தாவரங்களில் இருக்கும் ரசாயனம், நோய் தொற்றுகளை எதிர்த்து போராடும் தன்மை கொண்டவை.




வாழைப்பழத்தில் இருக்கும் லேக்டின் என்ற ரசாயனம், எய்ட்ஸ் வராமல் தடுக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதை உறுதிப்படுத்தும் ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
என்ன நண்பர்களே எதுக்கும் இப்ப இருந்தே நிறைய வாழைப்பழங்களை சாபிடுங்கோ ...........

திங்கள், 15 நவம்பர், 2010

முதல் பார்வையிலே காதல் வருமா?


                                                                                                                                    
பார்த்தவுடன் காதல் பற்றிக் கொண்டதாக பலரும் கூறுகிறார்கள். இப்படி முதல்பார்வையிலேயே காதல் வந்துவிடுமா? அப்படி வந்தால் அது காதல்தானா?
                                                                    
ஒருவரது தோற்றம்தான் நம்மை முதலில் ஈர்க்கும். ஏனெனில் நமது பார்வைக்கு முதலில் தோன்றுவது அவரது உருவம்தான். அவரது அழகு, நடை, உடை, பாவனைகள் இவற்றைத்தான் நாம் முதலில் பார்க்கிறோம். அது பிடித்திருந்தால் பார்த்த மாத்திரத்திலேயே அவர் நம்மை ஈர்த்து விடுவார்.

அப்படி பிடித்து போய்விட்டால் உங்கள் பார்வை அவரைத் துரத்துவதுபோல ஆர்வத்தோடு பார்க்கும். குளுமை வீசி கவர்ந்திழுக்க முயற்சிக்கும். இந்த பார்வையை எதிர்கொள்ளும் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் அவர்களுக்குள்ளும் உங்களை பற்றிய ஒரு அபிப்பிராயம் எழுவதும் இயல்பே. அதை அவர் எடுத்துக் கொள்ளும் விதத்தில்தான் உங்களது காதல் அரும்புவதும், கருகுவதும் இருக்கிறது.

பார்வையில் பலவிதம் இருக்கிறது. நீங்கள் பார்க்கும் பார்வைக்கும், அவர் பார்க்கும் பார்வைக்கும் பொருள் என்ன என்பதை புரிந்து கொள்வதில் தான் காதலின் வெற்றி இருக்கிறது. ஒருவரை மீண்டும் மீண்டும் ஆவலோடு பார்க்கிறோம் என்றால் அது காதல், காமம், அன்பு எதுவாகவும் இருக்கலாம்.



முதல் பார்வையில் உங்களுக்குள் ஆர்வம் வந்துவிட்டாலும் அது காதலா, இல்லையா என்பதை அறிய சில காலம் பிடிக்கும். காதலில் நேரத்தை பற்றி சிந்திக்க வேண்டியதில்லை. தொடர்ந்து காட்டும் நேச பார்வையும், அன்பு புன்னகையும், கனிவான நடவடிக்கைகளும் நீங்கள் விரும்புபவருக்கு உங்கள் மீது காதலை மலரச் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.

இப்படி பார்வையில் பல நாட்கள் கடந்தாலும் சிலருக்கு `காதல் இதுதானா? நாம் காதலில் விழுந்துவிட்டோமா’ என்பது தெரிவதில்லை. அதைக் கண்டுபிடிக்கவும் வழி உண்டு.

உங்கள் நடவடிக்கையில் முன்பைவிட மாற்றம் ஏற்பட்டிருப்பதாக உணர முடிகிறதா? ஒரு செயலைச் செய்யும்போது அம்மா, அப்பா உள்பட அருகில் இருப்பவர்கள் தலையில் தட்டி `உனக்கு என்ன ஆச்சு, ஒழுங்கா வேலைய பாரு’ என்று சொல்லித் தெரியவேண்டிய அளவில் உங்கள் கவனம் சிதறுகிறதா? அப்படியானால் அந்த நேரத்தில் உங்கள் சிந்தனையை யார் ஆக்கிரமித்திருக்கிறாரோ அவர் மீது உங்களுக்கு விருப்பம் வந்துவிட்டது என்று பொருள். அவரது பார்வைதான் உங்களுக்குள் இந்த மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதும் உண்மை.

காதல் தவறென்றும், அதை ஒரு பலவீனமான எண்ணமாக கருதுபவர்களும் உண்டு. அவர்கள் பெற்றோரின் தீவிர கண்காணிப்பில் வளர்ந்தவர் களாகவும், பாச உணர்ச்சி அதிகம் கொண்டவர் களாகவும் இருப்பார்கள்.

“மிகுந்த பாசம் காட்டி வளர்க்கபடுபவர்களே எளிதில் காதலில் விழுவார்கள்” என்பார் உளவியலின் தந்தை பிராய்டு. இப்படிபட்டவர்கள் தான் முதல்பார்வையில் தங்களுக்குள் காதலை அரும்ப விட்டுவிட்டு, அப்பா கண்டிபாரோ, எதிர்ப்புகளை சந்திக்க வேண்டி இருக்குமோ, காதலிப்போமா, வேண்டாமா? என்று குழப்பிக் கொண்டிருபார்கள்.

இவர்களுக்கு தன்னை விரும்புபவர் பார்க்கும்போது சந்தோஷமாக இருந்தாலும், கண்டும் காணாமலும் இருக்க முயல்வார்கள். அவர் தன் அருகில் இருந்து நீங்கியதும் அவரைத் தேடி விழிகளை அலைபாய விடுவார்கள். தங்களுக்குள் தாமே `கண்ணாமூச்சி’ ஆடிக்கொள்வதுபோல் இருக்கும், இவர்களது நினைப்பும், நடத்தையும்…

எது, எப்படியோ முதல் பார்வையில் காதலில் விழுந்தவர்கள் ஏராளம். அது சரியா? தவறா? என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். மற்றவர்களுக்கோ சரியென்றால் சரி, இல்லையென்றால் இல்லை.