♥♥♥ இலங்கையின் இனியவன் ♥♥♥

புதன், 6 ஜனவரி, 2010

எனது வாழ்க்கையில் முதல் தடவை நண்பர்களுடன்.........



எனது வாழ்க்கையில் முதல் தடவை நண்பர்களுடன் நீண்டதொரு சுற்றுலா .......
2008ம் ஆண்டு தீபாவளி தினத்தன்று எனது நண்பர்களுடன் (லிங்கேஸ்,வரன்,ஜெர்ரி,சுபா,ரவி, நில்ராய், கிரிஷாந்த், ஜீவன்,சயந்தன் மற்றும் சிலர் ) அதிகாலை 6 மணியளவில் வேனில் ஏரினோம். வராது நின்ற நண்பர்களையும் ஒருவாறு சேர்த்துவிட்டோம்.முதலில் லிங்கேஸ் வீட்டுக்கு போய் சாப்பாடு சம்மைத்து வைத்ததை எடுதுக்கொண்டு வேனில் ஏறினோம்.பின்னர் காலை சாப்பாடு வானிலேயே முடிந்தது.அந்த நாட்களில் "வாரணம் ஆயிரம்" திரைப்படம் வெளிவந்த காலம் ஆகையால் வேனில் அந்த பாடல்கள் சத்தமாக  ஒலித்தவன்னமே இருந்தது.


இடையில் ஒரு இரானுவ பரிசோதனை நிலையத்தில் வழிமறித்தார்கள். அனைவரும் இறக்கினோம். நாங்கள் பயணித்த விதம் அவர்களையும் குசிப்படுத்தியதுடன், சிரிக்கவும் வைத்தது. எனெனில் நாங்களோ ஆங்கிலேயர்களைபோல வண்ணமயமாய் இருந்தோம்.தலையில் கண்ணாடி,கோர்ட்,தொப்பிமற்றும் வித்தியாசமான ஆடைகளுடன்...    பின்னர் எங்கள் சுற்றுலா தேர்வு இடமான போபதேள்ள நீர்வீழ்ச்சிக்கு............... சென்று இரங்கினோம்.அதற்குள் நுழைய வெறும் 5 ரூபா மட்டுமே கட்டணம். அனுமதி சீட்டை வாங்கிக்கொண்டு உடைகளை மாற்றினோம். நீரில் இறங்கினோம்,குளித்தோம், விளையாடினோம், பிறகு என்ன ஒரே
கொண்டாட்டம் தான். நாம் ஒவ்வருவரும் சுற்றுலாவின் முழுமையான இன்பத்தினை அனுபவித்தோம். அதை வார்த்தைகளால் சொல்லமுடியாது. அனுபவித்தால் தான் தெரியும். 



இதில் ஸ்பெஷல் என்னன்னா முதலில் ஜெர்ரி மற்றும் சுபராஜ் ஆகிய இருவர்க்கும் இடையில் நீச்சல் போட்டி ........
இதில் முதலில் ஜெர்ரி ஒரு நொடியில் உயிர் தப்பினான். சற்று நீச்சல் தெரிந்ததால் சென்றுக்கொண்டிருந்த எங்கள் உயிர் மீண்டும் வந்தது எனலாம். அதன் பின்னர் செல்பேசியில் பாடல் கேட்டவாறு மணலில் சாய்ந்துவிட்டார் நம்ம ஜெர்ரி, என்றாலும் ஏனையோர் தொடர்ந்தும் மணலை வீசியும்,பந்தினாலும் விளையாடியவன்னமே இருந்தோம். இதிலும் எராளமான புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். அந்த இடம் ஒரு பெரிய நீர்வீழ்ச்சியை கொண்டிருந்தாலும் நீர் விழும் இடதிற்கு முன்னால் ஆழம் குறைவான, நீரும் இடை மட்டம் வரைதான் இருந்தது. அதனால் விளையாட அது ஒரு அருமையான இடம் எனலாம். எங்களுடைய குழுவில் விஜயகாந்த் என அழைக்கப்படும் சயந்தன் என்பவன் சிறுபிள்ளயைப்போன்றவன்.
அவனும் நானும் இன்னும் சிலரும் நீர் விழும் இடதிற்கு அருகில் சென்றோம்.அங்கும் அருகிலும் அழகிய சில இடங்களை எங்களுடைய கேமரா படம் பிடித்துக்கொண்டது. இதற்கிடையில் நம்ம சயந்தன் குளித்துக்கொண்டிருந்தவன் நீரில் இழுத்து சென்றான். அந்த நிமிடம் நாங்கள் வேன்டாத தெய்வமே இல்லை எனலாம். நம்ம லிங்கேஸ் அருகில் இருந்தவர்களை கத்தி அழைத்தும் கூட ஒருவரும் உதவிக்கு வரவில்லை. மீண்டும் அதிஷ்டவசமாக ஒரு கல்லை பிடித்ததால் அவன் தப்பினான். உடனே நாங்கள் பாறைக்கு அருகில் ஓடி சென்று கையை கொடுத்து தூகினோம். சற்றே பயந்திருந்த அவனுக்கு ஆறுதல் கூறினோம். எனினும் சிறு சிறு காயங்கள் அவன் உடம்பில் காணப்பட்டது. கொஞ்ச நேரம் கழித்து நம்ம நண்பர்கள் அவனுடன் கொஞ்சி பேசினார்கள்.அது எப்படின்னா தெரியும்தானே அடிதான். உண்மையாகவே அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவாது..........
                     காரணம், அதன் பின் அவர் நல்ல பையன்னாகிவிட்டன். மீண்டும் வேன்னிட்கு வந்து மதிய உணவை எடுத்தோம். ஆனால்  சாப்பிட தட்டு கொண்டு சென்றிருக்கவில்லை, எனினும் நம்ம வடிவேல் சொல்வதை போல 'வல்லவனுக்கு வாச்சதெல்லாம் ஆயுதம்தான்' உடனே ரவி எதையோ கொண்டு போய் மூன்று வாழை இலைகளை கொண்டு வந்தான். உடனே மூன்றையும் ஒன்றாக தரையில் பாயை விரித்து அதன் மேல் போட்டு சோறு முழுவதையும் இட்டோம். ஆதோடு கறிகளும் சேர்த்து சாப்பிட்டோம். வானின் சாரதியும் எங்களோடு ஒன்றாக இருந்து சாப்பிட்டார். பின்னர் சற்று நேரம் இருந்துவிட்டு, மீண்டும் நீரில் இறங்கினோம்.ஆனாலும் நான் இந்த தடவை இறங்கவில்லை. பொழுது சாய்ந்தது. எல்லோரும் தயாராகி வேநிற்ற்கு வந்தோம். பின் சற்று நேரத்தில் திரும்பி புறப்பட்டோம். இடையில் ஒரு கடையில் அப்பமும் தேநீரும் பருகினோம். அந்த கடையிலும் ஒரே கூத்துதான். படம் பிடிப்பது,சொஒஷ் கொட்டி அப்பம் சாப்பிடுவது என ........
வரும் போது நாங்களே பாடல்களை பாடிக்கொண்டே வந்தோம்.அன்றைய தினம் ஒரே குத்துதான். நான் இரவு பத்து  மணியளவில் வீட்டை வந்தடைந்தேன். வாழ்க்கையில் அன்று தான் முதல் தடவை அதுவும் தீபாவளி அன்று, கோயிலுக்கும் போகாமல்,வீட்டிலும் இருக்காமல் துன்பம் கலந்த இன்பத்தை அனுபவித்தது. வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்களில் இதுவும் ஒன்று,ஆகையினால்தான் நண்பர்களே இதை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். நீங்களும் இந்த இன்பத்தை அனுபவிக்க அங்கு சென்றுதான் பாருங்களேன்.
                  

               காத்திருங்கள் நண்பர்களே விரைவில் சுவாரச்சியமான                      பதிவொன்ருடன் சந்திப்போம்.............    

கருத்துகள் இல்லை: